JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஓராண்டை கடந்தும் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். தற்போது அதனை தடுக்க ஒரே வழி மாஸ்க் அணிவது, ஊரடங்கு கடைபிடிப்பது, தடுப்பூசி போடுவது என ஆராய்ச்சியார்கள் அறிவுறுத்தி வருகின்றனர். எனும் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் சுவாமிநாதன் எளிமையான வழிமுறைகளை மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுவதாவது,
காலையில் இஞ்சி, மஞ்சள் தலா ஒரு துண்டு, ஒரு வெற்றிலை ஆகியவற்றை 200 மில்லி தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து 50 மில்லியாக வற்றச்செய்து குடிக்கலாம் என்கிறார். இது உடலில் பரவியுள்ள வைரஸ் சுவரை உடைக்கும்.
பின்னர் காலை 11:00 மணிக்கு முருங்கை கீரை மற்றும் அதன் குச்சிகளை போட்டு சூப் அல்லது ரசம் வைத்து குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள புரோட்டீனை எடுக்க விடாமல் வைரசை தடுக்கும். இதனால் வைரஸ் பெருக்கம் குறையும் எனவும் அவர் கூறுகிறார்.
அதனைத் தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு கபசுர குடிநீர் குடிக்கலாம். இரவு 7:00 மணிக்கு கிராம்பு, பட்டை, ஏலக்காய் தலா ஒன்று, ஓமம் கால் ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து குடிக்கலாம். இதில் லவங்க பட்டை ரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும்.
இதன்மூலம் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும் என சித்தா டாக்டர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment