JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், மக்கள் பலன் பெரும் வகையில் சில வகையான சலுகையையும் அறிவித்து வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு சார்பாக கொரோனா நிவாரணமாக 13 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோதுமை, உப்பு, ரவை, பருப்பு உட்பட 13 மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
ஜூன் மாதம் 3 ஆம் தேதியான கலைஞரின் பிறந்தநாள் தினத்தன்று, தமிழக அரசு சார்பாக 13 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 2.11 கோடி அட்டை தாரர்களுக்கு தமிழக அரசு சார்பாக குடும்ப அட்டை தாரர்களுக்கு இந்த தொகுப்பு திட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment