JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சாட்டிங் செயலி வாட்ஸ்அப். உலகளவில் அதிக அளவில் வாட்ஸ்அப்பின் பயனர்களை கொண்ட இந்தியா, அதன் சேவைகளுக்கான மிகப்பெரிய சந்தையாகவும் இந்தியா திகழ்கிறது. அதன் தனியுரிமைக் கொள்கை சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
இதற்கு பரவலாக எதிர்ப்புகள் எழுந்தது. இதனால், பல பயனர்கள் வாட்ஸ் அப்பிற்கு மாற்றான செயலியான டெலகிராம் மற்றும் சிக்னலுக்கு மாறினர்.
நமது WhatsApp செயலியை திறந்தாலே, தனியுரிமைக் கொள்கை தொடர்பான அறிவிக்கைகள் தோன்றுகின்றன. அதற்கு நாம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், மே-15-ம் தேதிக்கு பிறகு, WhatsApp செயலி இயங்காது, புதிய தனியுரிமையை ஏற்காதவர்களின் கணக்கு நீக்கப்படும் என வைரலாக ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது.
ஆனால், WhatsApp-ன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இது குறித்து வெளியிட்டப்பட்டுள்ள தகவல்களில், வாட்ஸ் அப்பின் தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்கவில்லை என்றால், அவர்கள் கணக்கு எதுவும் நீக்கப்படாது. ஆனாலும் சில அம்சங்களை பயன்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளது.
அதாவது பயனர்கள், சாட்டிங் தவிர போன் மற்றும் வீடியோ கால் உள்ளிட்ட அழைப்புகளை மேற்கொள்ள முடியும், ஆனால், பழைய சாட்டிங் தகவல்களை பார்க்க முடியாது என கூறப்படுகிறது.
உங்களுக்கு WhatsApp செயலியை பயன்படுத்த விருப்பம் இல்லை என்றாலும், உங்கள் போனில் இருந்து WhatsApp செயலியை நீக்கினாலும் உங்கள் கணக்கு நீக்கப்படாது.
முன்னதாக சில மாதங்களுக்கு முன், வாட்ஸ்அப் போன்ற தனியார் செயலிகள் பயனர்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்களைப் பகிர விரும்புகின்றன, இதனை நிறுத்த வேண்டும் என்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வலுவாக கருத்து தெரிவிக்கப்பட்டது.
இது ஒரு தனியார் செயலி என்று கூறிய டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது, உங்கள் தனியுரிமை பாதிக்கப்படுகிறதென்றால், நீங்கள் வாட்ஸ்அப்பை நீக்கலாம் என கருத்து தெரிவித்தது
No comments:
Post a Comment