JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கொரோனா பரவல் எதிரொலியால் தள்ளிப்போன சிபிஎஸ் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 2 கட்டங்களாக நடத்த மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று (மே 23) ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் பொக்ரியால், 'சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது தொடர்பான முடிவை வரும் ஜூன் 1ம் தேதிக்குள் அறிவிப்பதாக தெரிவித்தார்.இந்நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடத்த மத்திய கல்வியமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
மத்திய கல்வித்துறையின் வரைவு அட்டவணைப்படி, முதற்கட்டமாக ஜூலை 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்கி ஆகஸ்ட் 20-ம் தேதி வரையிலும் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. முதல் கட்ட தேர்வில் பங்கேற்க இயலாத மாணவர்களுக்கு இரண்டாம் கட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment