Search This Blog

Wednesday, May 12, 2021

2 - 18 வயது உடையவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசி சோதனை!

0 comments
இந்தியாவில் 2 முதல் 18 வயது உடையவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசி சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி உள்ள நிலையில் சமீபத்தில் ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்கிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2 முதல் 18 வயது உடையவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசி சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆம், பாரத் பயோடெக் வேண்டுகோளை ஏற்று பரிசோதனைக்கு நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. எனவே, பரிந்துரையின் படி டெல்லி எய்ம்ஸ், பாட்னா எய்ம்ஸ் மற்றும் நாக்பூர் மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment