Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 15, 2021

பிளஸ் - 2 தேர்வு ரத்தா? சி.பி.எஸ்.இ., விளக்கம்!

'பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என, சி.பி.எஸ்.இ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் பள்ளி மற்றும்கல்லுாரிகள் மூடப்பட்டுஉள்ளன. 'ஆன்லைன்' வாயிலாகவே மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகின்றன. சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால் நடத்தப்படும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. எனினும், பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

ஜூன் 1ம் தேதி, கொரோனாவால் நிலவும் சூழலை ஆய்வு செய்து அதற்கேற்ப தேர்வுக்கான புதிய தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், தேர்வு நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன் அந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டது.கடந்த சில நாட்களாக சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வுகளும் ரத்து செய்யப்படலாம் என்ற செய்திகள் வலம் வந்தன.

அந்த வதந்திக்கு சி.பி.எஸ்.இ., முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது குறித்து சி.பி.எஸ்.இ., மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அது மக்களிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும்' என்றார்.

No comments:

Post a Comment