JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, May 20, 2021

பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தொடக்கம்

மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ளமாணவர்களுக்கு, முன்மாதிரி திருப்புதல் தேர்வு நேற்று முதல் தொடங்கியுள்ளது.ராமநாதபுரத்தில் பிளஸ் 2 வகுப்பில் 13 ஆயித்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 

இவ்வாண்டு பொதுத்தேர்விற்கு முன்னதாக செய்முறை தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா 2ம் கட்ட பரவல் காரணமாக பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தேர்விற்கு தயராக ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்கின்றனர்.கொரோனா பரவல் முடிந்த பின் 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால், மாணவர்களை தேர்விற்கு தயார் செய்வதற்காக வாட்ஸ் ஆப் மூலம் திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.

முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி கூறுகையில், பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வை எளிதில் எதிர்கொள்வதற்கு ஏதுவாக திருப்புதல் தேர்வு நடக்கிறது.

ஒவ்வொரு தேர்விற்குரிய கேள்விகள் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வைக்கப்படும். அதற்குரிய விடைகளை மாணவர்கள் பேப்பரில் எழுத வலியுறுத்துகிறோம். பள்ளி திறந்த உடன் விடைத்தாள்களை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்,'என்றார்.

No comments:

Post a Comment