Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 21, 2021

நாடு முழுவதும் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு - அரசு அறிவிப்பு!

2021 - 22ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் முதல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தொற்றை கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் நலனில் கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளுக்கான கால அவகாசங்கள் நீட்டிக்கப்பட்டன.

அதில் 2019-20ஆம் ஆண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதும் ஒன்று. பின்னர் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியது. ஆனால் பொதுமக்கள் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை சந்தித்தனர்.

எனவே வருமான வரிதாக்கல் செய்ய தொடர்ந்து அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31ஆம் தேதி வரை கால அவகாசம் முடிய இருந்த நிலையில், அது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2021 செம்டம்பர் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டம், 1961 இன் 119ஆவது பிரிவின் கீழ் இந்தத் தளர்வு அளிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment