Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 21, 2021

கருப்பு பூஞ்சை பாதிப்பு தொற்று அல்ல ஆனால்...: டாக்டர் அமர் அகர்வால் பேட்டி

கருப்பு பூஞ்சை பாதிப்பு தொற்று அல்ல, ஆனால் 40 முதல் 80 சதவீதம் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என கண் மருத்துவர் அமர் அகர்வால் கூறியுள்ளார். 

கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பட்டு வரும் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறித்து அகர்வால் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால் கூறியதாவது: 

கருப்பு பூஞ்சை பாதிப்பு என்றால் என்ன, யார் யாருக்கு வரும்?கருப்பு பூஞ்சை பாதிப்பு என்பது ஏற்கனவே இருக்கும் ஒன்று தான். பூஞ்சை என்பது எல்லா இடத்திலும் இருக்கும். 

அழுகிய பழங்கள், காய்கறிகள், மரங்கள், ஈரமான இடங்களில் இந்த பூஞ்சை இருக்கும். காற்றில் உள்ள இந்த பூஞ்சை நோய் எதிர்ப்பு திறன் அதிகம் கொண்ட நபருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வாய்ப்பு கிடைக்கும் போது அதாவது நமது நோய் எதிர்ப்பு திறன் குறையும் போது இந்த பூஞ்சை உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

சர்க்கரை நோயாளிகள், ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது, எச்ஐவி நோயாளிகள், புற்றுநோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கும். இதேபோல், தற்போது கொரோனா நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படுகிறது. ஸ்டீராய்டு போடும் சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் அற்றவர்களுக்கு ஸ்டீராய்டினால் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். எனவே, கொரோனா நோயாளிகள் உடல்நலம் தேறிய உடனேயே தங்களின் சர்க்கரை அளவை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவதன் காரணமாகவே கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது.

கருப்பு பூஞ்சை உடலில் எப்படி நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது?

சுவாசிக்கும் போது மூக்கில் உள்ள திசுக்களை பாதிக்கிறது. மூக்கில் இருந்து சைனசுக்குள் செல்கிறது. அங்கிருந்து கண்ணுக்கு செல்கிறது. பின்னர் கண்ணில் இருந்தவாறு மூளைக்கு செல்கிறது. கருப்பு பூஞ்சையில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இது ஒரு தொற்று நோய் கிடையாது. ஆனால், கெட்ட விஷயம் என்னவென்றால் இதனால் ஏற்படும் இறப்பு சதவீதம் அதிகம். 40 முதல் 80 சதவீதம் இதனால் இறப்பு ஏற்படும் என்கிறார்கள். இது மிகவும் வேகமாக பரவும். உடலில் வந்த 5 நாட்களுக்குள்ளேயே இந்த பூஞ்சை மூளையை சென்றடைந்துவிடும். இதனால், இறப்பு சதவீதம் அதிகமாகும்.

பூஞ்சை பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிய முடியுமா?

கருப்பு பூஞ்சை பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிவது மிகவும் கடினம். ஏனென்றால், பூஞ்சை ஓரிரு நாளிலேயே மிகவும் வேகமாக பரவிவிடும். இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாகும். பூஞ்சை சைனசுக்கும், கண்ணுக்கும் எப்போது செல்கிறதோ அப்போதே அறுவை சிகிச்சை மூலமே இந்த பூஞ்சையை நாம் அகற்ற முடியும். கண்ணில் முழுமையாக பரவிவிட்டால் கண்ணையே நாம் எடுக்கவேண்டிய நிலை ஏற்படும். கொஞ்சம் விட்டால் கூட இது மீண்டும் பரவ ஆரம்பித்துவிடும். மூளைக்கு சென்றுவிட்டால் நியூரோ சர்ஜன் மூலம் பூஞ்சையை அகற்ற வேண்டும். பூஞ்சையை அகற்றிய பிறகு தொடர்ந்து 6 முதல் 8 வாரங்கள் தொடர் மருத்துவம் தேவைப்படும். அப்போது தான் மீண்டும் அது பரவாது.

பாதிப்பு வராமல் எப்படி தடுப்பது?

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உடலில் சர்க்கரை அளவை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் போது உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியம். நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் சத்தாண உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் வெளியே செல்வதை முழுமையாக தவிர்த்துவிட வேண்டும். 2 மாதங்களாவது வீட்டிலேயே இருக்க வேண்டும். வயல்வெளி, தோட்டம் உள்ளிட்ட இடங்களில் பூஞ்சை அதிகமாக இருக்கும். இது தொடர்புடைய வேலை செய்பவர்கள் 2 மாதங்களுக்கு அந்த வேலையை தவிர்ப்பது நல்லது.

தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியே செல்லும் போது 2 மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். உடலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதைத்தாண்டி லேசான அறிகுறிகள் தென்பட்டால் கூட உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.இவ்வாறு அவர் கூறினார்.

மூக்கடைப்பு ஏற்படும். அப்படி மூக்கடைப்பு ஏற்படும் போது மூக்கில் இருந்து வெளியேறும் நீர் கருப்பாக இருக்கும். இருமும் போது ரத்தத்துடன் சேர்ந்து கருப்பாக உமிழ் நீர் வரும். தாடையின் மேல்பகுதியில் கருப்பாக பக்குகள் போன்று இருப்பது, மூக்கு அல்லது கண் பகுதிகளில் வீக்கம், கண் சிவப்பு நிறத்தில் மாறுவது, கண் பார்வை மங்குவது, பார்வை இரண்டு இரண்டாக தெரிவது, இதனுடன் இணைந்து காய்ச்சல் இருக்கும். எனவே, கொரோனா நோயாளிகள் குணமடைந்த பின்னர் மூக்கடைப்பு ஏற்பட்டால் உடனடியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment