Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 22, 2021

இன்றும் நாளையும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக அடுத்த வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்தது. ஒரு வாரத்துக்கு கடைகள் ஏதும் இயங்காது என்பதால் இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் இயங்க அரசு அனுமதி அளித்திருக்கிறது. 

அதே போல, மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 1,500 சிறப்பு பேருந்துகளும் திருச்சி, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே 3,000 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்ய வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் கோயம்பேடு, தாம்பரத்திலிருந்து மக்கள் பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக சென்னை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் நாளை சென்னையில் இருந்து மதுரைக்கு இரவு 11.30 மணிக்கும் திருச்சிக்கு 11.45 மணிக்கும் நெல்லைக்கு இரவு 8 மணிக்கும் தூத்துக்குடிக்கு இரவு 7 மணிக்கும் கடைசி பேருந்து இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment