JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் நாளையும் மட்டும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. எனவே கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10-ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கின் காலை 6 மணி முதல் 10 மணி வரை மளிகை கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கக் கூடிய கடைகள் திறந்து இருக்கலாம் என அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்களின் நலன் கருதி இன்றும், நாளையும் மட்டும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 9 மணி வரையும், நாளை காலை 6:00 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரு தினங்களிலும் மால்கள் திறப்பதற்கான அனுமதி கொடுக்கப்படவில்லை.
.

No comments:
Post a Comment