JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் கொரோனா நிவாரண பணம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் இன்றும் டோக்கன் உள்ளவர்கள் ரேசன் கடைகளில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
அரிசி அட்டை வைத்துள்ளவர்கள் இந்த நிவாரணம் பெறத் தகுதியானவர்கள் ஆவர். ஆனால், இப்போது, புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment