JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் கூட்டுறவு அமைப்புகள் 35 வருடத்திற்கும் மேலாக தமிழக அரசால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. அரசுத்துறை போல அரசின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தவும் கூட்டுறவுத்துறை பெரும் உதவி செய்து வருகிறது.மேலும், பொது விநியோகத்தின் கீழ் மக்களுக்கு உதவி செய்ய கூட்டுறவுத்துறை பெரும் பங்காற்றி வரும் நிலையில், கூட்டுறவு துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ஓய்வு வயது வரம்பை 60 ஆக மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், கூட்டுறவு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக மாற்றியமைக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு நிறுவன ஊழியர்களின் ஓய்வு வயது வரம்பை 59 வயதில் இருந்து 60 வயதாக மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment