Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 7, 2021

முடி பிரச்சனைகளுக்கு உதவும் வெங்காய எண்ணெய்

நம் நாட்டில் வெங்காயம் இல்லாத குழப்பு வகைகளை பார்ப்பது அரிது. பெரும்பான்மையாக பயன்படுத்தும் காய்கறி வகைகளில் ஒன்றான வெங்காயம் முடி பிரச்சனைகளை சரிசெய்யும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முடி உதிர்வு, முடி மெலிந்துபோதல் ஆகிய பிரச்சனைகளுக்கு வெங்காயம் மூலம் தீர்வு காணலாம். பல்வேறு செயற்கை கிரீம்களை பயன்படுத்தி அலர்ஜி போன்ற பிரச்சனைகளை சந்திப்பவர்கள் வெங்காய எண்ணெய் தயாரித்து அதனை முறையாக அப்ளை செய்து வந்தால், விரைவில் நல்ல முன்னேற்றத்தை பார்க்கலாம்.

வெங்காய எண்ணெய்க்கு எங்கு செல்வது? என்று யோசிக்க வேண்டாம். மிக எளிமையாக இந்த எண்ணெயை வீட்டிலேயே தயாரிக்கலாம். நாள்தோறும் அப்ளை செய்துவந்தால் முடி வலிமைபெறும். இப்போது, வெங்காய எண்ணெய் தயாரிக்கும் முறையை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

வெங்காய எண்ணெய்யை தயாரிக்க இரண்டு பொருட்கள் மட்டும் போதும். ஒன்று வெங்காயம், மற்றொன்று தேங்காய் எண்ணெய்.

செய்முறை

தேவையான அளவு வெங்காயத்தை எடுத்து மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். ஜூஸாகவும் தயாரிக்கலாம் அல்லது பேஸ்ட் போல் கெட்டியாகவும் இருக்கலாம். வெங்காயதை அரைத்தபிறகு, அடுப்பை பற்ற வையுங்கள். எரியும் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய்யை ஊற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் வெங்காய ஜூஸ் அல்லது பேஸ்டை அதில் போட்டு நன்கு கலக்குங்கள். சிறிது நேர சூடேற்றத்துக்குப் பிறகு பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி தனியாக வைத்துவிடுங்கள். சூடு முழுவதுமாக குறையும் வரை காத்திருங்கள். பின்னர், வெங்காய எண்ணெயை நன்கு வடிக்கட்டி பாட்டிலில் எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை

சிறிதளவு வெங்காய எண்ணெய்யை எடுத்து உச்சந்தலையில் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். நாள்தோறும் இவ்வாறு செய்து வந்தால் முடி வலிமையாக நன்கு வளரும். வெங்காய எண்ணெய்யை பயன்படுத்துவதால் கிடைக்கும் கூடுதல் நன்மைகளை இங்கே தெரிந்து கொள்வோம்.

வெங்காய எண்ணெய் மருத்துவ பயன்கள்

1. வெங்காய எண்ணெய் மயிர்க்கால்களுக்குள் இறங்கு முடியை தரமானதாக்கும். வறட்சியான முடிகள் இருப்பவர்களுக்கு முடி வலிமையாக இருக்காது. மேலும் முடி உதிரும் பிரச்சனை யை எதிர்கொண்டிருப்பார்கள். அவர்கள் வெங்காய எண்ணெயை தலைக்கு தேய்க்கும்போது முடி உதிர்தல், உடைதல் போன்றவை இருக்காது.

2. தலை வறட்சியாக இருந்தால் பொடுகு தொல்லை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் நாள்தோறும் இந்த எண்ணெய்யை அப்ளை செய்தால் பொடுகு பிரச்சனை களும் இருக்காது. நீண்ட நேரம் தலையில் எண்ணெய் இருப்பது பிடிக்காதவர்கள், குளிக்கும் முன் இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்துக் கொள்ளலாம்.

3. வெங்காய எண்ணெயை தலைக்கு நாள்தோறும் தேய்த்து வந்தால் உச்சந்தலைக்கு ரத்தம் ஓட்டம் சீராக இருக்கும். இதனால், முடி நன்கு வலிமையடைவதுடன், முடியின் கருமை நிறமும் அதிகரிக்கும்.

4. வெங்காய எண்ணெய்யின் வாசம் ஒரு சிலருக்கு பிடிக்காது. அதிகளவு வாசம் வீசும் என்பதால் பொது நிகழ்ச்சிகளுக்கு இந்த எண்ணெயை தேய்த்துக்கொண்டு செல்ல முடியாது. குளிக்கும் முன்னர் எண்ணெய்யை நன்கு தேய்த்து பின்னர் சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும்.

5. தொடர்ந்து வெங்காய எண்ணெய்யை தேய்த்து வந்தால் புதிய முடிகளின் வளர்ச்சி அதகரிக்கும். பாக்டீரியா தொற்றுகள் இருந்தால், அதனை போக்கி ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வெங்காய எண்ணெய் வித்திடும்.

No comments:

Post a Comment