JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, May 7, 2021

நாளை முதல் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் !!

தமிழக முதல்வராக இன்று காலை பதவி ஏற்ற திமுக தலைவர் முக ஸ்டாலின் மக்களுக்கு தேவையான பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். முதற் கட்டமாக அனைத்து மகளிரும் சாதாரண நகர பேருந்துகளில் நாளை முதல் இலவசமாக பயணிக்கலாம் என்பதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்கள். 

இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.

No comments:

Post a Comment