Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 16, 2021

தமிழகத்தில் நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்! எப்படி விண்ணப்பிப்பது?

தமிழகத்தில் நாளை முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.எனவே,இந்த 'இ-பாஸ்' பெற எப்படி விண்ணப்பிப்பது? என்று பார்ப்போம்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே 10 ஆம் தேதியில் இருந்து மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்,முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்காமல்,கூட்டம் கூட்டமாகவும்,சமூக விலகலை கடைப்பிடிக்காமலும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன்காரணமாக,தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.அதன்படி,அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 10 வரை மட்டுமே திறக்க அனுமதி.ஆனால்,டீக்கடைகள் இயங்க அனுமதிக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து,நாளை முதல் திருமணம்,முக்கிய உறவினரின் இறப்பு,வேலைவாய்ப்பு,மருத்துவ தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டத்திற்குள்ளும்,பிற மாவட்டத்திற்கு வெளியே பயணம் செய்யவும் 'இ-பாஸ்' முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும்,வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வருவதற்கும் 'இ-பாஸ்' முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே,அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்வதற்கு,'இ-பாஸ்' பெற ஆன்லைனில் https://eregister.tnega.org என்ற லிங்கை பயன்படுத்தி,தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து 'இ-பாஸ்' ரிஜிஸ்டர் செய்யவும்.அதன்பின்னர்,இந்த பதிவிற்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து உடனடியாக மொபைல் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பி வைக்கப்படும்.

மேலும்,இந்த இ-பாஸ் பெற மே 17 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment