Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 23, 2021

தளர்வுகளற்ற ஊரடங்கு எதிரொலி: திருமணத்துக்கான இ-பதிவு நீக்கம்: உரிய மருத்துவ காரணங்கள், இறப்புக்கு செல்ல மட்டுமே அனுமதி

நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு எதிரொலி காரணமாக திருமணத்துக்கு செல்வதற்காக இ-பதிவு செய்வது தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. திருமணத்துக்கு செல்ல பலர் விண்ணப்பம் செய்வதை தடுக்கும் வகையில் திருமணத்துக்கான இ-பதிவு கடும் கட்டுப்பாடுகளுடன் அமலுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் விண்ணப்பதாரர்கள் பெயர் பத்திரிகையில் இருந்தால் மட்டுமே இ-பதிவு ெசய்ய முடியும் எனவும், திருமணத்துக்கு செல்வோர் ஒரே பதிவிலேயே அனைத்து வாகனங்களுக்கும் இ-பதிவு செய்யும் புதிய நடைமுறை கடந்த 20ம் தேதி அமலுக்கு வந்தது. மேலும், ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் இருந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


இதை தொடர்ந்து திருமணத்துக்கு செல்ல ஒரே பதிவில் அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டன. இதன் மூலம் திருமணம் எனக் காரணம் கூறி பலர் இ-பதிவு செல்வது தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு ஒரு வாரத்துக்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதில், உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு அனுமதிக்கப்படும் எனவும், மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மீண்டும் திருமணத்துக்கான இ-பதிவு நீக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment