JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
புதிய கல்விக் கொள்கை மூலம் மாநிலங்களில் குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ''புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாகவுள்ளது.
3,5 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
மத்திய பாஜக அரசுடன் மோதல் போக்குடன் செயல்பட வேண்டும் என்பது எங்களின் நோக்கம் இல்லை.
இருமொழிக் கொள்கையை ஒழித்து, மும்மொழிக் கொள்கையை திணிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கை உள்ளது'' என்று கூறினார்.
No comments:
Post a Comment