JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, May 19, 2021

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு.. அரசு அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செய்முறை தேர்வுகள் முடிவடைந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுவரை மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி கட்டணம் செலுத்துதல் போன்ற காரணங்களுக்காக பெற்றோர்களை நேரில் வரவழைத்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இத்தகைய பணிகளை பள்ளிகள் இணைய வழியில் மேற்கொள்ளலாம். தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி செயல்படுவது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment