Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 25, 2021

`ஐ.ஏ.எஸ் கனவல்ல... நிஜம்!' - இலவச வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எப்படி?

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட சிவராஜவேல் ஐ.ஏ.எஸ். அகாடமி, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மாணவர்களைச் சிறந்த முறையில் தயார்படுத்திவருகிறது. 

திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் கிளை விரித்துள்ள இந்த அகாடமி, இதுபோன்ற ஆன்லைன் கருத்தரங்குகள் மூலம் மாணவர்களிடம் விழிப்புணர்வும், வழிகாட்டலும் ஏற்படுத்திவருகிறது.

ஐ.ஏ.எஸ் - இன்றைக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு. ஆனால், அது கனவல்ல... நிஜம் என்பதை உங்களுக்கு உணர்த்த, வழிகாட்ட கருத்தரங்கு ஒன்றை ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்தவிருக்கிறது. 

'ஐ.ஏ.எஸ் கனவல்ல... நிஜம்! - வெற்றிக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி' என்ற தலைப்பில் ஆன்லைன் வழி நடைபெறும் கட்டணமில்லாக் கருத்தரங்கு இது.ஐ.ஏ.எஸ் கனவல்ல... நிஜம்! வெற்றிக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள, லாக்டௌன் காலத்தில் சிவில் சர்விஸ் பரீட்சைக்கு தயாராவது எப்படி, சிவில் சர்வீஸ் தேர்வு நுணுக்கங்கள், சிவில் சர்வீஸ் மாணவர்கள் செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும், சிவில் சர்வீஸ் மாணவர்கள் பரீட்சைக்கான தயாரிப்பை எங்கு தொடங்க வேண்டும் - என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கு இந்தக் கருத்தரங்கு விடையளிக்கும்.

மே 30 (ஞாயிறு), காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடக்கும் இந்தக் கருத்தரங்கில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி உ. சகாயம், காவல்துறை கண்காணிப்பாளர், எஸ். செல்வரத்தினம், மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் எஸ். சிவராஜவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

கருந்தரங்கில் கலந்துகொள்ள கட்டணம் இல்லை; முன்பதிவு அவசியம்.

முன் பதிவு செய்ய: https://bit.ly/2Sdrqag

No comments:

Post a Comment