JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பிளஸ் 1 மாணவர்கள், 3௦ ஆயிரம் பேர், நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, பிளஸ் 2வில், 'ஆல் பாஸ்' ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த கல்வியாண்டில் ரத்து செய்யப்பட்டதால், அந்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை, அரசு அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு அடிப்படையில், மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.பிளஸ் 1ஐ பொறுத்தவரை, கடந்த ஆண்டு, ஒரு பாடத்துக்கு தேர்வு நடத்தவில்லை. ஆனால், அந்த மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் காலாண்டு மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் வழங்கப்பட்டது.அதேநேரம், இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்துள்ள, 8.5 லட்சம் பேரில், 30 ஆயிரம் மாணவர்கள், பிளஸ் 1ல் சில பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.
அவர்களுக்கு பிளஸ் 2வில், ஆல் பாஸ் வழங்கினாலும், பிளஸ் 1ல், 'அரியர்' தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, அவர்களின் நிலை குறித்து, மதிப்பெண் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.இந்நிலையில், அரசு வெளியிட்டுள்ள மதிப்பெண் வழிகாட்டு முறையில், தற்போது பிளஸ் 2 முடித்துள்ளவர்களில் யாராவது, பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலோ அல்லது பங்கேற்காவிட்டாலோ, அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணாக, 35 மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படும் என, கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால், 30 ஆயிரம் மாணவர்கள், பிளஸ் 1ல், 'பெயில்' ஆனாலும், அரியர் பாடங்களில், 35 மதிப்பெண் பெறுவர். அவர்கள் பிளஸ் 2விலும் தேர்ச்சி சான்றிதழ் பெற்று, உயர் கல்விக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment