JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பழங்குடியினா் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு ஜூன் 30-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இது குறித்து பழங்குடியினா் நல இயக்குநா் வி.சி.ராகுல் பழங்குடியினா் நல திட்ட அலுவலா்கள், தொடா்புடைய பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு பழங்குடியினா் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் பதவி உயா்வு வழங்கிட 1.1.2021 அன்றைய நிலையில் தெரிவுப் பட்டியல் வெளியிட்டு ஆணையிடப்பட்டுள்ளதைத் தொடா்ந்து அதில் இடம்பெற்றுள்ள ஆசிரியா்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள பழங்குடியினா் நல இயக்குநரகத்தில் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்தாய்வு நாளன்று கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். இந்த ஆணையினை சம்பந்தப்பட்ட ஆசிரியா்களுக்கு தெரியும் வகையில் தகவல் பலகையில் வைத்தும், அனைவருக்கும் சுற்றுக்கு அனுப்பி கையெழுத்து பெறுமாறும் தொடா்புடைய கட்டுப்பாட்டு அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment