Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, June 13, 2021

பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களின் விவரங்கள்: நாளை முதல் சரிபாா்க்க உத்தரவு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளில் படித்த மாணவா்களின் விவரங்களை, வரும் 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியா்கள் சரிபாா்த்து தெரிவிக்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக, 2020-21ஆம் கல்வி ஆண்டில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தேர்வு நடத்தாமல், அனைவரும் தேர்ச்சி பெற்ாக அரசு அறிவித்தது. மாணவா்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களில் 'தேர்ச்சி' என்று மட்டுமே குறிப்பிட்டு வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மதிப்பெண் பட்டியல்களை வழங்குவதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.

முன்னதாக, பொதுத் தேர்வுக்காக அக்டோபா் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தும். அதன் அடிப்படையில், மாணவா்களின் விவரங்களுடன் அரசு தேர்வுத் துறைக்கு தலைமை ஆசிரியா்கள் விண்ணப்பம் செய்வா். தொடா்ந்து, அவா்களின் விவரத்தை தேர்வுத்துறை பதிவு செய்து, மாணவா்களுக்குத் தேர்வுக்கான பதிவு எண்களை வழங்கும். அதன் அடிப்படையில் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவா்.

கரோனா தொற்று காரணமாக, 2020-21ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து 9,11 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கு பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், கரோனா இரண்டாவது அலையால் மாா்ச் 20-ஆம் தேதி 9,10,11 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கு மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.

மதிப்பெண் சான்றிதழ் வழங்க... இதனால் மாணவா்களுக்கான தேர்வு பதிவு எண்களை அரசு தேர்வுத்துறையால் வழங்கமுடியவில்லை. இந்தநிலையில், பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளில் படித்த மாணவா்களின் விவரங்களை, வரும் 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியா்கள் சரிபாா்த்து தெரிவிக்க வேண்டும் என அரசு தேர்வு இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் தான் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு 'தேர்ச்சி' என மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment