Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 30, 2021

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் விபரம்;இன்று கடைசி தேதி...!

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.


இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன.இதனால்,சிபிஎஸ்இ மாணவர்களுக்கான மதிப்பெண்கள்,முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

மாணவர்களின் உள்மதிப்பீடு, இடைக்கால மற்றும் முன் வாரிய தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய ஒரு தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த மதிப்பெண் முடிவுகளை தயாரிப்பதற்காக அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏழு ஆசிரியர்களை உள்ளடக்கிய எட்டு பேர் கொண்ட குழுவை அமைக்குமாறு சிபிஎஸ்இ நிர்வாகம் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியது.

மேலும்,அனைத்து பள்ளிகளும் தங்கள் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்களை உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பீடு செய்து அதனை சிபிஎஸ்இ இணையதளத்தில் ஜூன் 11 ஆம் தேதிக்குள் பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன. அதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில்,மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றுவதர்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.எனவே,10 ஆம் வகுப்பு முடிவுகள் குறித்த விபரங்களை இணையதளத்தில் இன்று பள்ளிகள் சமர்ப்பிக்கின்றன.மதிப்பெண்கள் விபரம்:

இதனால்,மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் முடிவுகள் ஜூலை 20 க்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,புதிய மதிப்பீட்டு அளவுகோல்களின்படி,மதிப்பெண்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.அதன்படி,உள் மதிப்பீட்டின் அடிப்படையில் 20 மதிப்பெண்கள் மற்றும் ஆண்டு முழுவதும் பள்ளிகளால் நடத்தப்படும் தேர்வுகளின் அடிப்படையில் 80 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

அந்த 80 மதிப்பெண்களில்,மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு,முன் போர்டு தேர்வுகளுக்கு 40 மதிப்பெண்கள், இடைக்கால தேர்வுகளுக்கு(மிட்-டெர்ம்) 30 மதிப்பெண்கள், மற்றும் அவ்வப்போது நடத்தப்பட்ட டெஸ்ட்களுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் கல்வியை அணுகுவதில் சிரமம் காரணமாக ஆண்டு முழுவதும் நடத்தப்படும் எந்தவொரு தேர்விலும் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு ஒரு தொலைபேசி மதிப்பீட்டை நடத்துமாறு சிபிஎஸ்இ நிர்வாகம் பள்ளிகளைக் கேட்டுக்கொண்டது.

அதுமட்டுமல்லாமல்,சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவுகள் ஜூலை 31 க்குள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக, 12 ஆம் வகுப்பு முடிவுகள் 10 ஆம் வகுப்புக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment