Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 30, 2021

சேர்க்கைக்கு முன்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் எதிர்பார்ப்பு


கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கும் முன்பாவது, தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி, 'ரிசல்ட்' வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில், குடும்ப சூழல் காரணமாக, தனித்தேர்வர்களாக பத்தாம் வகுப்புக்கு மேல், பொதுத்தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 

இவர்களுக்கு, பள்ளி மாணவர்களோடு சேர்த்து, தேர்வு நடத்தி, மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதால், கல்லுாரியில் சேருவதில் தடையில்லை. கொரோனா தொற்று காரணமாக, கடந்தாண்டு பத்தாம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையிலும், தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.

தற்போது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கான அறிக்கையில், தேர்வெழுத விரும்புவோருக்கு, பின்னர் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு அறிவித்தால், பயனுள்ளதாக இருக்கும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.தனித்தேர்வர்கள் சிலர் கூறுகையில்,' பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு பின், கல்லுாரியில் நேரடி வகுப்பில் சேர திட்டமிட்டுள்ளோம். 

கல்லுாரிகளில் சேர்க்கை பணிகள் துவங்கும் முன்பே, தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி ரிசல்ட் வெளியிட வேண்டும். தொற்று வேகமாக பரவியதால், பள்ளி மாணவர்களை போல, தனித்தேர்வர்களுக்கும் பயிற்சி பெற, தனியார் டியூஷன் சென்டர்களுக்கு, செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், தேர்வுக்கு முன்பு, 'புளூ பிரின்ட்' வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.

No comments:

Post a Comment