JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பிளஸ் 2 செய்முறை மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 28ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வினை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் +2 தேர்வை ரத்து செய்துள்ளன.
கடந்த வாரம் தமிழகமும் 12ஆம் வகுப்பை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் மதிப்பெண் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்று ஆலோசிக்க குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.
அதே போல் சிபிஎஸ்இ சார்பிலும் மதிப்பெண் கணக்கிடுவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிளஸ் 2 செய்முறை மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 28ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும் நடத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ள செய்முறைத் தேர்வுகளை இணைய வழியாக மட்டும் நடத்தி முடிக்கவும் சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment