12-ம் வகுப்பு தேர்வு - மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை..! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Wednesday, June 2, 2021

12-ம் வகுப்பு தேர்வு - மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

சி.பி.எஸ்.சி +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு குறித்து இன்று முதல்வர் அவசர ஆலோசனை.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழ் நாட்டில் பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் கொரோனா பரவல் காரணமாக CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில், சி.பி.எஸ்.சி +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு குறித்து இன்று முதல்வர் அவசர ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

1 comment:

  1. 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்.
    கண்டிப்பாகத் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்.


    ReplyDelete

Post Top Ad