JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு +2 பொதுதேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல மாநிலங்களில் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகின்றது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பொது தேர்வு நடத்துவது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இடையே கருத்து கேட்பு நடத்தியதில் 60 சதவீதம் பேர் கட்டாயம் தேர்வை நடத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக இறுதி முடிவெடுக்க பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவதா? இல்லையா? என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் +2 பொதுத்தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் நலன் கருதி நல்ல முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தேர்வு நடத்தப்பட்டால் உரிய கால அவகாசம் வழங்கப்படும். முதலமைச்சர் ஒப்புதல் பெற்று ஆன்லைன் வகுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment