Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, June 5, 2021

அரசு அலுவலகங்களில் 30% பணியாளர்களுடனும்; சார்பதிவாளர் அலுவலகங்களில் 50% பத்திரப் பதிவுகளுடனும் இயங்க அனுமதி...!

அரசு அலுவலகங்கள் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
சார்பதிவாளர் அலுவலகங்களில் 50 சதவிகிதம் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதி

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த,கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கானது வரும் ஜூன் 7 ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில்,வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி,ஜூன் 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி காலை 6-00 மணி வரை,தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும்,தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு,பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment