JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் தொடக்க பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளிகளில் நேற்று மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டுமென ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு பணிகள் இருப்பதால் தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
2020-21 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணாக்கர்களின் தேர்ச்சி விவரங்களை உள்ளீடு செய்தல் , 2021-22 ஆம் கல்வியாண்டிற்கு மாணாக்கர் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் தொடங்க வேண்டும் என்பதால் பள்ளிக்கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
27 மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்களும், பிற ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் எனவும், கொரோனா தொற்று குறைந்த பிறகு 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் பள்ள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment