Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, June 26, 2021

இதை செய்யும் தனியார் பள்ளிகளில் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.! அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை .!

அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் நடக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வளாகத்தில் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது குறித்து தற்போது வழிகாட்டு நெறிமுறைகள் அரசு சார்பாக வெளியிடப்பட்டு உள்ளது ,மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது குறித்து குழு அமைக்கப்பட்டு அந்த குழு வழங்கிய பல்வேறு வழிகாட்டுதல் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

அதே போன்று தற்போது 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரடியாக கொரோனா காலத்திற்கு முன்பே எழுதி இருந்தனர் அதனால் மட்டுமே 50% வழங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.12ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தால் அதிகபட்சமாக மதிப்பெண் எடுத்து இருப்பேன் நினைக்கும் மாணவர்கள் ,தனி தேர்வு எழுத கூடிய மாணவர்களுடன் தேர்வுகள் நடைபெறும். கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும் நேரத்தில் அவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு முறைப்படி அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது அதே போன்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கட்டணம் வசூலிக்கும்
தனியார் பள்ளிகளில் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக டேப் வழங்குவது குறித்து முதற்கட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது விரைவில் இதுகுறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்த அவர் கல்வி தொலைக்காட்சியை 4 சேனலாக துவங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்து இறுதி முடிவு அடுத்த வாரத்தில் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment