Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 28, 2021

கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவே பாடங்கள் கற்பிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்

''ஐ.சி.எம்.ஆர்., வழிக்காட்டல், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பெற்று, முதல்வருடன் ஆலோசனை செய்த பின்பு தான், பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்,'' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

திருச்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக, வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 1 மதிப்பெண்கள் பள்ளிக்கல்வித்துறையிடம் உள்ளது. அதன் அடிப்படையில், விரைவாக பிளஸ் 2 மதிப்பெண் வெளியிடப்படும்.கொரோனா தாக்கம் முழுமையாக கட்டுக்குள் வந்த பின், மாணவர்களுக்கு கேடு ஏற்படாத நாட்களில்தான் பள்ளிகள் திறக்கப்படும். அது வரை கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவே பாடங்கள் கற்பிக்கப்படும்.

தற்போது, கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.இருப்பினும், உளவியல் ரீதியாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். மூன்றாவது அலை வரும், எனக் கூறுகின்றனர். எனவே, ஐ.சி.எம்.ஆர் வழிக்காட்டல், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பெற்று, முதல்வருடன் ஆலோசனை செய்த பின், பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment