Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, June 26, 2021

கல்வித் தொலைக்காட்சி பாருங்க.. தண்டோரா அடித்துச் சொன்ன தலைமை ஆசிரியர்!

திருச்சியில் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியை பார்க்குமாறு தண்டோரா அடித்து தலைமை ஆசிரியர் ஒருவர் விழுப்புணர்வை ஏற்படுத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கல்வி தொலைக்காட்சி மூலம் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டும் பள்ளிகள் திறக்கப்படாததால் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடம் கற்பிக்கும் நடைமுறையை தொடர்கிறது.

அனைத்து மாணவர்களும் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பாடங்களை கற்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியை பார்க்குமாறு தண்டோரா அடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அரசு பள்ளி மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சி மூலமே கற்க முடியும் என மாணவர்களுக்கு அவர் எடுத்துரைத்தார். பள்ளியின் தலைமையாசிரியரே நேரில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

No comments:

Post a Comment