JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கல்வி டி.வி-யில் ஒளிபரப்பப்படும் பாடவிவரங்களை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஆண்டிற்கும் மேலாக காணப்படும் நிலையில், இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிரையில் காணப்படுகிறது. தமிழகத்திலும், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படுள்ள நிலையில், மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அரசு அறிமுகப்படுத்திய கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்களை ஒளிபரப்பும் நிகழ்வை, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வி தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, தற்போது பள்ளிகளை திறக்க தற்போதைக்கு வாய்ப்பில்லாத நிலையில், கல்வி டி.வி மூலமாக பாடங்கள் கற்பிக்க வேண்டும் என்றும், கல்வி டி.வி-யில் ஒளிபரப்பப்படும் பாடவிவரங்களை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment