அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள் தள்ளிவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, June 1, 2021

அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள் தள்ளிவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் செயலர் (பொறுப்பு) இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

போக்குவரத்து ஆய்வாளர் (கிரேடு-1) பணிக்கான நேர்முகத் தேர்வு ஜுன் 8 முதல் 11-ம் தேதிவரை தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. கரோனா தொற்றுகாரணமாக அத்தேர்வு தள்ளிவைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி பின் னர் அறிவிக்கப்படும்.

அதேபோல, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் உதவி மின் ஆய்வாளர், உதவிப் பொறியாளர் (மின்சாரம்), தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவிகளுக்கான கலந்தாய்வு தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும், ஜுன் 22 முதல் 30-ம்தேதி வரை நடைபெறுவதாக இருந்த, அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகின்றன. ஏற்கெனவே நடத்தப்பட்ட துறைத் தேர்வுகளில் முடிவு வெளியிடப்படாத 14 துறைத் தேர்வுகளின் முடிவுகள் ஜுலை 20-ம் தேதி வெளியிடப்படும். மே பருவ துறைத் தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும். அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad