Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 14, 2021

ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படுமா? - வெளியாகும் தகவல்களால் பரபரப்பு.


தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறைக்கு தேவையான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பல ஆண்டுகளாக போதிய பணியாளர்கள் இல்லாமலும், சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும் ஆசிரியர் தேர்வு வாரியம் இயங்கி வந்த நிலையில், அது நடத்தும் ஒவ்வொரு தேர்விலும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு ஏராளமான வழக்குகள் உயர்நீதின்ற விசாரணையில் உள்ளன.


இதனால் ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்து விடலாம் என்ற கருத்து முந்தைய ஆட்சியில் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்துவிட்டு, ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை டிஎன்பிஎஸ்சியிடம் வழங்கி விடலாம் என்று தற்போதைய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதை உறுதிப்படுத்தும் வகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் பேட்டியும் உள்ளது. உயர்கல்வி துறைக்கு தேவையான ஆசிரியர்கள், டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

பொன்முடி, உயர்கல்வித்துறை அமைச்சர்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள போட்டி தேர்வு பயிற்சியாளர் நட்ராஜ், ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைப்பது என்பது தவறான முடிவு என்றும், இது போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

நட்ராஜ், போட்டி தேர்வு பயிற்சியாளர்

கடந்த காலங்களில் பல்வேறு தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சிறப்பாக நடத்தி இருக்கிறது என்றும், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மட்டும்தான் பிரச்சினையாக வெடித்தது என்றும் அவர் கூறினார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைப்பதற்கு பதிலாக, அதை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று நட்ராஜ் கருத்து தெரிவித்தார்.

டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருவதாகவும், பல்வேறு தேர்வுகளில் குளறுபடிகள் நடைபெற்று பலர் கைது செய்யப்பட்டு இருப்பதையும் நட்ராஜ் சுட்டிகாட்டினார்.

No comments:

Post a Comment