Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, June 4, 2021

போன் நம்பர் இல்லாமலே ஆதார் அட்டை தரவிறக்கம் : ஈஸி வழிமுறைகள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் வீட்டிற்குள்ளே அனைத்து வசதிகளையும் பெறும் வகையில் தற்போது டிஜிட்டல் சேவைகல் நம் வாழ்வில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

அனைத்து சேவைகளுக்கும் தற்போது ஆதார் அடையாள அட்டை மிக முக்கியமான ஒன்றாக இருப்பதை நாம் அறிவோம். உங்களின் போன் எண்கள் இல்லாமல் கூட உங்களின் ஆதார் அடையாள அட்டையை எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது உங்களுக்கு தற்போது மிகவும் உதவியானதாக இருக்கும்.

uidai.gov.in. இணையத்திற்கு முதலில் செல்லவும்

My Aadhaar option என்ற பகுதிக்கு சென்று அங்கே Order Aadhaar Reprint என்பதை மெனுவில் இருந்து தேர்வு செய்யவும்

பிறகு உங்களின் 12 இலக்க ஆதார் அடையாள அட்டை எண்ணை உள்ளீடாக தரவும் அல்லது 16 இலக்க வி.ஐ.டி. எண்ணையும் நீங்கள் உள்ளீடாக வழங்கலாம்.

செக்யூரிட்டி கோடினை பதிவு செய்த பிறகு My Mobile number is not registered என்பதை தேர்வு செய்யவும்.

அப்போது ஆல்ட்டர்னேட்டிவ் தொலைபேசி எண் தேவை என்று கேட்கும். அப்போது ஆல்ட்டெர்நேட்டிவ் எண்ணை வழங்கி ஓ.டி.பியை பெறவும்

ஆதார் அடையாள அட்டையை ப்ரிவியூ பார்த்த பிறகு நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

1 comment:

  1. நாங்க தே நீங்க அனுப்பும் link தான அப்புறம் ஏன் வேற வருது

    ReplyDelete