Wednesday, June 2, 2021

தொடர் விக்கலை குணப்படுத்த உதவும் அருமருந்து


தேவையான பொருட்கள்

கீழாநெல்லி இலை ( உலர்ந்தது) - 50 கிராம்

கரிசலாங்கண்ணிக் கீரை ( உலர்ந்தது) - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
மாதுளம் பிஞ்சு. - 50 கிராம்
மாதுளம் பூ. - 50 கிராம்

செய்முறை

முதலில் கீழாநெல்லி மற்றும் கரிசலாங்கண்ணிக் கீரை ஆகியவற்றை தேவையான அளவு எடுத்து சுத்தப்படுத்தி நன்கு உலர வைக்கவும்.
சீரகத்தை நன்கு வறுத்துக் கொள்ளவும்.

மாதுளம் பிஞ்சு மற்றும் மாதுளம் பூ தேவையான அளவு எடுத்து உலரவைத்து மேற்கூறிய அளவு எடுத்துக் கொள்ளவும். பின்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து அரைத்து தூளாக்கிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் தொடர் விக்கலால் துன்பப்படும்பொழுது உடனடி தீர்வை உண்டாக்க உதவும் அருமருந்தாகும். கல்லீரல் சார்ந்த குறைபாடுகளை தீர்க்க உதவும் அருமருந்தாகும்.

மேற்கூறிய குறைபாடுகளால் துன்பப்படுபவர்கள் இந்த சூரணத்தை தயார்செய்து தினமும் காலை மாலை என இருவேளையும் தலா அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனுடன் கலந்து சாப்பாட்டிற்கு முன்பு சாப்பிடவும்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

-கோவை பாலா,

No comments:

Post a Comment