Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 12, 2021

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு புத்தக வினியோகம் இயக்குனர் உத்தரவு


புதிய கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக, அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்களை அனுப்பும் பணி துவங்கியுள்ளது.தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1 முதல் புதிய கல்வி ஆண்டு துவங்கி உள்ளது. 

பள்ளிகளை திறந்து, வகுப்புகளை துவங்குவதற்கான ஆயத்த பணிகளில், பள்ளி கல்வித் துறை ஈடுபட்டுள்ளது.முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளின் அலுவலக பணியாளர்கள் வரும், 14ம் தேதி முதல் தினமும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி சேவை பணிகள் கழகம் சார்பில், புதிய புத்தகங்கள் அச்சிடப்பட்டு, ஒவ்வொரு மண்டல அலுவலகங்களிலும், தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த புத்தகங்களை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, பள்ளிகளுக்கு வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன. இதற்காக, மாவட்ட வாரியாக போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், அதற்கான செலவினங்களை முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே வழங்க அனுமதித்தும், தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment