Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 29, 2021

பள்ளி மாணவர்களுக்கு 10-ஆம் வகுப்பு வரை ஊக்கத்தொகை – தமிழ்நாடு அரசு பரிசீலனை!


தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை . இதனால் ஆன்லைன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு இழந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு தேவையான செல்போன் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அத்துடன் இவர்களின் கல்வியும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

அதேசமயம் கிராமத்தில் உள்ள பெண் குழந்தைகள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊக்கத்தொகை அடைந்து 3 முதல் ஆறாம் வகுப்பு வரை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இதை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் திட்டத்தை 10 வகுப்பு வரை நீட்டிக்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்துள்ளது. 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சார்ந்த மாணவியருக்கு ஆண்டுக்கு தலா 500 ரூபாயும், 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு ஆண்டுக்கு தலா 1000 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment