JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஜூலை 23 காவல், தீயணைப்பு மற்றும் சிறைத் துறையில்காலியாக உள்ள 11,813 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கானஉடல்திறன் தேர்வுகள் வரும் 26-ஆம் தேதி முதல்நடத்தப்படும் என சீருடைப் பணியாளர்தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடுஇரண்டாம் நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்புப் படைவீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப் டம்பர் 17- ஆம் தேதி வெளியானது . இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் 13- ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடந்தது . தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 11 ஆயிரத்து 813 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது .
இந்த தேர்வு மூலம் ஆயுதப்படை 2- ஆம் நிலை காவலர் பதவிக்கு 3 ஆயிரத்து 784 பேர் தேர்வு செய்யப் பட உள்ளனர் . தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 2- ஆம் நிலை காவலர் பதவிக்கு 6 ஆயிரத்து 545 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் .
அதேபோல சிறைத் துறையில் 2- ஆம் நிலைக் காவலர் பதவிக்கு ஆண்கள் 107 பேர் , பெண்கள் 12 பேர் என மெத்தம் 119 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் . தீயணைப்புத் துறையில் தீயணைப்பாளர் பணியிடத்துக்கு 458 ஆண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் . ஆயுதப் படை மற்றும் சிறைத் துறையில்
3- ஆம் பாலினத்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது .
5 லட்சத்து 50 ஆயிரத்து 314 பேர் விண்ணப்பித்து இருந் தனர் . இதில் 4 லட்சத்து 91 ஆயிரம் பேர் எழுத்து தேர்வில் கலந்து கொண்டனர் . எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள் விவரத்தை கடந்த பிப்ரவரி 19- ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டது .
தற்போது , கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் , சான்றிதழ் சரிபார்த்தல் , உடற்கூறு அளத்தல் , உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் திறன் போட்டிகள் வரும் 26 ஆ - ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் 20 மய்யங் களில் நடத்தப்பட உள்ளன . விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று சீருடைப் பணியாளர் தேர்வா ணையம் அறிவித்துள்ளது . இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று பணி யில் சேருபவர்களுக்கு ரூ .18,200 முதல் ரூ .52,900 வரை ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment