Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 23, 2021

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் - மத்திய அரசு


கொரோனா 3-வது அலை அச்சுறுத்தலால் நீட் மற்றும் பிற பொது தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை.

கொரோனா வைரஸின் 3-வது அலை பரவக்கூடும் என்ற அச்சம் இருப்பதால், நீட் தேர்வை ஒத்தி வைக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில், மக்களவையில், திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியனின் கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரவீன் பாரதி பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில், கொரோனா 3-வது அலை அச்சுறுத்தலால் நீட் மற்றும் பிற பொது தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை என்றும், நடப்பாண்டு செப்டம்பர் 12-ம் தேதி மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment