Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 14, 2021

தமிழ்நாட்டில் ஓரிரு நாளில் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் வெளியீடு?

12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள், மாணவர்களின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரியாக 50 மதிப்பெண்களும், 11-ம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 20 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு மற்றும் அக மதிப்பீட்டின் அடிப்படையில் 30 மதிப்பெண்களும் என்ற முறையில் கணக்கிடப்பட்டுள்ளது.

இதன்படி, கணக்கிடப்பட்டுள்ள மதிப்பெண் பட்டியல் தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. அவற்றை சரி பார்க்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

இதனால், 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 31-ஆம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment