Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 14, 2021

பள்ளி, கல்லூரிகள் ஜூலை 20-ம் தேதிக்கு பிறகு திறப்பு? - அரசு ஆலோசனை



தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தமிழகத்திலும் பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19 ஆம் தேதி நிறைவடைகிறது.

அதனால், தமிழகத்தில் 20 ஆம் தேதி அல்லது 22 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில் 10, 11, 12 ஆம் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment