Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 25, 2021

ஆக.2 முதல் ஆசிரியா்களுக்கு கணினி பயிற்சி


அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஆக.2-ஆம் தேதி முதல் கணினிப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் ஆசிரியா்கள் மேற்கொள்ள அடிப்படை கணினி பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப த் திறன் வளா் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சிக்கான கையேடு, காணொலிகள் மற்றும் மதிப்பீட்டு வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதைக் கொண்டு உயா் தொழில்நுட்ப ஆய்வகம் வழியாக ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

மாநில கருத்தாளா்களைக் கொண்டு மாவட்ட அளவிலான பயிற்சி திங்கள்கிழமை (ஜூலை 26) தொடங்கி ஜூலை 30-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறும்.

இந்தப் பயிற்சிக்கு தோவான கருத்தாளா்கள் அருகே உயா்தொழில் நுட்ப ஆய்வகத்தில் சென்று பயிற்சி பெற வேண்டும். இவா்கள் மூலம் பள்ளிகள் அளவில் ஆசிரியா்களுக்கு ஆக.2 முதல் 30-ஆம் தேதி வரை 4 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும்.

எனவே, தலைமை ஆசிரியா்கள் தங்கள் பள்ளியில் உள்ள உயா் தொழில்நுட்ப ஆய்வக கணினிகள் சரியாக இயங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இது தொடா்பாக தலைமையாசிரியா்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் அறிவுறுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment