Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, July 25, 2021

சி.ஐ.எஸ்.சி.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.ஐ.எஸ்.சி.இ.,யின் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அச்சுறுத்தல் காரணமாக, சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் கீழ் இந்த ஆண்டு நடக்க விருந்த 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.இந்த வகுப்பு மாணவர்களுக்கு மாற்று மதிப்பீடு கொள்கை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சி.ஐ.எஸ்.சி.இ.,யின் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இது குறித்து சி.ஐ.எஸ்.சி.இ.,யின் தலைமை நிர்வாகியும், பொதுச் செயலருமான ஜெர்ரி அராத்துான் கூறியதாவது:

இந்த தேர்வில் 10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவியர் என இருதரப்பினரும் 99.98 சதவீதம் தேர்ச்சி அடைந்து உள்ளனர். பிளஸ் 2 வகுப்பில் மாணவர்கள் 99.86 சதவீதமும், மாணவியர் 99.66 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்களின் கூட்டுத்தொகையில் பிழை இருக்கும்பட்சத்தில், அதை சரிசெய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment