JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
வீட்டுக்கடனுக்கான வட்டி 6.90 சதவீதமாக இருந்த நிலையில் அதனை தற்போது எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ். 6.66 சதவீதமாக குறைத்துள்ளது.
எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனானிஸின் இந்த வட்டி விகிதம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். இந்த கடன் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும் இந்த கடன் திட்டத்தில் 50 லட்ச ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும்.
குறிப்பாக இந்த வட்டி விகிதம் அனைவருக்கும் இதே விகிதத்தில் கிடைக்காது. ஒவ்வொவரின் சிபில் ஸ்கோருக்கு ஏற்ப டன் கிடைக்கும். சிபில் ஸ்கோர் 800 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்.
பஞ்சாப் சிந்த் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி மிகவும் குறைந்தபட்சமாக 6.65 சதவீத வட்டியை நிர்ணயம் செய்திருக்கிறது . இதற்கடுத்து எஸ்பிஐ வங்கி 6.70 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் வழங்குகிறது .
பேங்க் ஆப் பரோடா , ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஜாஜ் பின்சர்வ் ஆகியவை மிகவும் குறைந்தபட்சமாக 6.75 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் வழங்குகின்றன
No comments:
Post a Comment