Search This Blog

Monday, July 12, 2021

அரசு பணிகளுக்கான எழுத்து தேர்வுகளை.. அனுமதி பெற்று நடத்தலாம் - முதல்வர் அறிவிப்பு.!!!

0 comments
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டு, கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி இன்று காலை 6 மணி முதல் ஊரடங்கு நீட்டிப்பு அமலுக்கு வந்தது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மத்திய, மாநில அரசு பணிகளுக்கான எழுத்து தேர்வுகளை மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று நடத்திக்கொள்ளலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

திருமண நிகழ்வில் 50 நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை தொடரும் என்றும், பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுவதை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment