Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 13, 2021

"புதுச்சேரி போல் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு" அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காட்டி வந்த நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் ஜூலை 16ஆம் தேதி முதல் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா குறைந்து வருவதால் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற 16ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தைப் பொருத்தவரை ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் மாணவர்களின் படிப்பைக் காட்டிலும் அவர்கள் உயிரே முக்கியம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் கல்வி டிவி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரியை போல் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வு செய்து முதல்வருக்கு அறிக்கை தரப்படும்.முதல்வர் சொல்லும் வழிகாட்டுதல்படி பள்ளிகளைத் திறக்க முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாணவர்களின் கல்வித் திறனை கருத்தில்கொண்டு பள்ளிகளை விரைந்து திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment