JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
சென்னை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர், ஆய்வக தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட 165 பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன.நிறுவனம்: சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை
மொத்த காலியிடங்கள்: 165
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Nurse - 60
சம்பளம்: மாதம் ரூ.14,000
பணி: Pharmacist - 10
சம்பளம்: மாதம் ரூ.14,000
பணி: Lab Technician - 05
சம்பளம்: மாதம் ரூ.15,000
பணி: Anaesthesia Technician - 10
சம்பளம்: மாதம் ரூ.12,000
பணி: ECG Technician - 10
சம்பளம்: மாதம் ரூ.12,000
பணி: Multi Purpose Hospital Worker - 70
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதிகள்: டிப்ளமோ அல்லது பி.எஸ்சி(நர்சிங்) முடித்தவர்கள், டிபார்ம், டிஎம்எல்டி, இசிஜி டெக்னீசியன் தேர்ச்சி பெற்றவர்கள், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியுள்ளவர்கள் தங்களது அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாக கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர் மற்றும் பேராசிரியர், மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனை, எழும்பூர், சென்னை-08
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.08.2021
மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/07/2021072474.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment